புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2018

ஜமால் கசோகியின் கொலை எதிரொலி சுவிட்சர்லாந்து அதிரடி


ஊடகவியலாளரான ஜமால் கசோகியின் கொலை வழக்கை கருத்தில் கொண்டு சவுதி அரேபியாவுக்கான
ஆயுதம் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.

சவுதிக்கு ஆயுத ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றது என்றும், ஜமால் கொலையில் அடுத்தடுத்து தெரியவரும் முன்னேற்றங்களை தொடர்ந்து இந்த முடிவு திரும்ப பெறப்படும் என சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்துறைக்கான செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஜமாலின் மரணம் தொடர்பாக, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் சவுதிக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தன.

இதில் ஜெர்மனி சவுதிக்கு கடந்த வாரம் ஆயுதம் ஏற்றுமதி செய்வது நிறுத்தப்படும் என்று அறிவித்தது.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்து சவுதிக்கு ஆயுதம் வழங்குவது நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள வொஸிங்டன், போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கட்டுரைகளை எழுதி வந்தார்.

இந்த நிலையில், துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவ ஜமால் கசோக்சி மாயமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad