புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2018

புலிகளை அழிக்கத் துணை நின்ற சித்தார்த்தனை கௌரவியுங்கள் - மகிந்தவிற்கு சிபாரிச

  இறுதி வரைக்கும் புலிகளுக்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டுக்காக சித்தார்த்தனுக்கு கா
லம் கடந்தேனும் ராஜபக்ச கௌரவம் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் மகிந்த ராஜபக்சஜனாதிபதியோக இருந்தபோது சமாதான செயலகத்தின் செயலாளர் நாயகமாகவும் செயற்பட்ட பேராசிரியர் ராஜிவ விஜயசிங்க தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ருவிற்றரிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளொட் இயக்கத்தைச் சேர்ந்த சித்தார்ந்தன் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிறேற்றபின் அவருக்கு ஆதரவாக வவுனியாவில் பேரணி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார் என்பதோடு 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடையும் வரை புளொட் இயக்கத்தை சிறிலங்கா அரசாங்கத்தின் துணை இராணுவக் குழுவாக வழிநடத்தி தமிழர் தாயகப் பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்களை படுகொலை செய்ததோடு காட்டிக்கொடுப்புக்களிலும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை நினைவுபடுத்தும் வகையிலேயே சித்தார்த்தனை மகிந்த ராஜபக்ச கௌரவிக்கவேண்டும் என ராஜிவ விஜயசிங்க தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் அண்மையில் கிழக்கு மாகாணத்தில் மகிந்த தரப்புடன் இணைந்து பிரதியமைச்சுப் பதவி பெற்றுக்கொண்ட வியாழேந்திரன் புளொட் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ad

ad