புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2018

வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்!

சிறிலங்கா நாடாளுமன்றத்தை ஜனாதிபதி சிறிசேன கலைத்ததற்கான தங்கள்
எதிர்ப்பை வெளியிடும் வகையில் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சரத் அமுனுகமவுடனான சந்திப்பை  எட்டு மேற்குலக நாடுகள் புறக்கணித்துள்ளன.
வெளிவிவகார அமைச்சர் சரத்அமுனுக சந்திப்பொன்றிற்காக 43 நாடுகளின் பிரதிநிதிகளிற்கு அழைப்பை விடுத்திருந்த போதிலும் மிக்குறைந்த அளவு வெளிநாட்டு இராஜதந்திரிகளே இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
பிரிட்டன் பிரான்ஸ் நெதர்லாந்து நோர்வே அவுஸ்திரேலிய கனடா தென்ஆபிரிக்கா இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்கள் இன்றைய சந்திப்பை புறக்கணித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா ஜேர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தியாவின் சார்பிலும் உயர்ஸ்தானிகர் கலந்துகொள்ளவில்லை. இதேவேளை சீனா பாக்கிஸ்தான் கியுபா உட்பட 20 நாடுகளின் பிரதிநிதிகள் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
சிறிலங்கா  அரசியல் நிலவரம் குறித்தும்  அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகள் குறித்தும் மேற்குலக நாடுகள் கடும் அதிருப்தி வெளியிட்டுவந்துள்ள நிலையிலேயே இன்றைய சந்திப்பை அவர்கள் புறக்கணித்துள்ளனர்.

ad

ad