www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், நவம்பர் 01, 2018

இன்றும் புதிய அமைச்சர்கள் பதவியேற்புவிவசாய பிரதி அமைச்சராக அங்கஜன் ராமனாதன்

புதிய அமைச்சரவைக்கான புதிய அமைச்சர்கள் பதவியேற்று வரும் நிலையில் இன்றும் சில புதிய அமைச்சர்கள் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
 இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அந்த வகையில் துமிந்த திஸாநாயக்க
நீர்ப்பாசன, நீர்வழி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
அத்தோடு தயாசிறி ஜெயசேகர திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
பியசேன கமகே இளைஞர்,மகளிர் மற்றும்  சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சராக லக்ஸ்மன் செனவிரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.
விவசாய பிரதி அமைச்சராக அங்கஜன் ராமனாதன் நியமிக்கப்பட்டுள்ளார்