திங்கள், டிசம்பர் 10, 2018

லைக்கா நிறுவனம்  புங்குடுதீவுக்கு வழங்கிய  பாரிய  நிதி உதவி
09-12-2018 நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்ற புங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நிகழ்த்திய காற்று வெளிக்கிராமம் எனும்
நிகழ்விற்குசிறப்பு விருந்தியுணராக லைக்கா நிறுவனத்தின் உரிமையாளரான திரு & திருமதி சுபாஷ்கரன் அல்லிராஜா அவர்கள் வருகை தந்திருந்தனர். அப்போது, புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் புதிய தலைவராக தெரிவாகியுள்ள பிரேம்ஜிந் சிவசாமி  அவர்களது உரையில்; அடுத்த ஐந்து ஆண்டுகளிற்கான திட்டங்களையும், அதற்கா ஏற்படப்போகும் செலவையும் குறிப்பிட்டார். நிகழ்வுகளை உன்னிப்பாக பார்வையிட்டுக் கொண்டிருந்த லைக்கா நிறுவனர் தனக்காக வழங்கப்பட்ட நேர உரையில் எம்மூர் அபிவிருத்திக்காக £50,000 வழங்குவதாக உறுதியளித்தார்.

இப்பெருவுதவியை வழங்கிய லைக்கா நிறுவனர் திரு & திருமதி சுபாஷ்கரன் அவர்களிற்கு எம்மண் சார்பாகவும், எம்மக்கள் சார்பாகவும் எமது நன்றிகள் 🙏🙏🙏
இவ் நிதியை சரியான முறையில் பயன்படுத்தும் தகமை புதிய தலைவருக்கு உண்டு என்பதில் நாம் ஆணித்தரமாக நம்புகிறோம். அவரது நேரடிப்பார்வையில் எம்மண்ணிற்கான அபிவிருத்தி வேலைகள் சிறப்பாக இடம்பெற வாழ்த்துக்களை கூறும் அதேவேளை, எம்மாலான சகல உதவிகளும், ஆதரவும் அவருக்கு எப்போதும் உண்டு என்பதையும் கூறிக்கொள்கிறோம்.
நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. அதற்காக புங்குடுதீவு நலன்புரி சங்கத்தை பாராட்டியே ஆகவேண்டும்👍👍👍👍
மீண்டும் எமது நன்றிகள் திரு & திருமதி சுபாஷ்கரன் அவர்களிற்கு 🙏🙏🙏