புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2018

வெள்ள அனர்த்தம் - 16 ஆயிரத்து 872 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 819 பேர் பாதிப்பு

வடக்கில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள இடரால் 16 ஆயிரத்து 872 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 819 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.


“3 ஆயிரத்து 602 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 229 பேர் இடர்பெயர்ந்து 38 இடைத்தங்கல் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகளவாக 33 ஆயிரத்து 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிவரையான நிலவரப்படி இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முல்லைத்தீவு 
ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 466 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 724 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 163 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 548 பேர் இடர்பெயர்ந்து 3 இடைத்தங்கல் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 3 ஆயிரத்து 688 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 468 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆயிரத்து 37 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 817 பேர் இடம்பெயர்ந்து 10 தற்காலிக முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 331 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 4 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் 3 வீடுகள் முழுமையாகவும் 3 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி

கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 177 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 124 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 416 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 509 பேர் 7 இடைத்தங்கல் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் வெள்ளத்தால் 4 வீடுகள் முழுமையாகவும் 4 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 7 ஆயிரத்து 386 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆயிரத்து 797 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 744 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் 12 தற்காலிக முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் வெள்ளத்தால் 3 வீடுகள் முழுமையாகவும் 103 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பச்சிளைப்பளை பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 412 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 852 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அவர்களில் 162 குடும்பங்களைச் சேர்ந்த 596 பேர் 5 தற்காலிக முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் வெள்ளத்தால் 108 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மன்னார் 

மன்னார் நகர் பிரதேச செயலர் பிரிவில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ளனர்.
நானாட்டன் பிரதேச செயலர் பிரிவில் காற்றின் தாக்கத்தால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்
மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 273 குடும்பங்களைச் சேர்ந்த 708 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


வவுனியா

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவில் 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ad

ad