புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2018

இழப்பீட்டு நிவாரணத்தில் 25 ஆயிரத்தை களவாடிய கிராமசேவகர் - யாழில் சம்பவம்

இழப்பீட்டு நிவாரணமாக வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாயில் 25000 ரூபாயை தனக்கு வழங்கவேண்டும் என கூறி குடும்ப பெண்ணை மிரட்டி இலஞ்சம் பெற்ற கிராமசேவகா் சிக்கலில் மாட்டியுள்ளதுடன் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலா் பிாிவின் கீழ் உள்ள கிராமசேவகா் ஒருவரே இவ்வாறு இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்.மாவட்ட செயலா் என்.வேதநாயகனின் கடுமையான நடவடிக் கைகளில் சிக்கி தற்காலிகமாக வேலையையும் இழந்துள்ளாா்.

இது குறித்து மேலும் தொியவருவதாவது,

இழப்பீட்டு நிவாரணமாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படும், திட்டமொன்றில் பெண் தலைமைத்துவ குடும்பமொன்றை இணைப்பதென்றால், இழப்பீட்டு தொகையில் 25,000 ரூபாவை தனக்கு இலஞ்சமாக தர வேண்டுமென கிராம அலுவலர் தெரிவித்துள்ளார்.

குடும்ப தலைவியும் அதற்கு சம்மதித்தார். எனினும், 15,000 ரூபாவையே அந்த பெண் வழங்கினார். “பேச்சு பேச்சாக இருக்க வேண்டும்“ என கண்டிப்பாக கூறிய கிராமசேவகர், மீதி 10,000 கேட்டு நச்சரித்துள்ளார். வேறு வழியின்றி குடும்ப தலைவி அதையும் வழங்கினார்.

தனக்கு நேர்ந்த சம்பவத்தை இரகசிய கடிதமாக எழுதி, மாவட்ட செயலாளரிற்கு அனுப்பினர் அந்த பெண். தனது அலுவலர்களை அனுப்பி விடயம் தொடர்பில் விசாரணை நடத்தினார் மாவட்ட செயலாளர்.

பின்னர், குறிப்பிட்ட பெண்ணை மாவட்ட செயலகத்திற்கு அழைத்து விடயத்தை ஆராய்ந்தார். உரிய ஆதாரங்களை திரட்டி, நிர்வாக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி முடிவு கிட்டும் வரை,

இலஞ்சம் வாங்கிய கிராம அலுவலரை தற்காலிகமாக பணநீக்குமாறு நேற்று எழுத்துமூலம் உத்தரவிட்டுள்ளார் மாவட்ட செயலாளர்

ad

ad