புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2018

5ம் திகதியும் வரமாட்டோம்:மஹிந்த அறிவிப்பு

எதிர்வரும் 5 ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள போவதில்லை என மகிந்ததரப்பு அறிவிப்பு விடுத்துள்ளது.

இதன் மூலம் மீண்டும் மஹிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டு வந்து தோற்கடிக்கும் ரணில் தரப்பின் முயற்சி கேள்விக்குள்ளாகியுள்ளது.

அண்மையில் ஜனாதிபதியை சுட்டமைப்பினரும் அதே போன்று ஜக்கிய தேசியக்கட்சி சார்ந்த தரப்புக்களும் சந்தித்த போது மீண்டுமொரு முறை நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டு வந்து நிறைவேற்றினால் ஏற்றுக்கொள்வதாக மைத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவ்வகையில் எதிர்வரும் 5ம் திகதி மீண்டுமொரு நம்பிக்கையில்லா பிரேரணையினை மஹிந்தவிற்கு எதிராக கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.ஆனால் 5ம் திகதியும் அமர்வை தாங்கள் புறக்கணிக்கவுள்ளதாக மஹிந்த தரப்பு தெரிவித்துள்ளமை அதனை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.


இதன் மூலம் மைத்திரி –மஹிந்த திட்டமிட்டே இத்தகைய நகர்வுகளை முன்னெடுக்கின்றார்களாவென்ற சந்தேகம் உச்சமடைந்துள்ளது.

ad

ad