புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2018

பிரான்சில் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சம் – ஈபிள் கோபுரம் மூடப்படுகின்றது

பிரான்சில் நடைபெற்று வரும் அரசுக்கெதிரான மஞ்சள் ஜக்கெட் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சம் காரணமாக நாளை சனிக்கிழமை ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரான்ஸ் முழுவதும் 89,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும், தலைநகர் பாரீஸில் ராணுவ வாகனங்கள் நிறுத்தப்படும் எனவும் அந்நாட்டு பிரதமர் எய்ட்வார் பிலிப் அறிவித்துள்ளார்.

மேலும், பாரீஸின் செம்ப்ஸ்-எலைசீஸ் பகுதியிலுள்ள கடைகள் மற்றும் உணவகங்களை மூடுமாறு காவல்துறையினர் அறிவித்துள்ளதுடன் சில அருங்காட்சியகங்களும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல தசாப்தகாலங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான வன்முறை கடந்த சனிக்கிழமையன்று பாரீஸில் நடைபெற்றிருந்தது.

மக்களின் போராட்டத்துக்கு காரணமான எரிபொருள் உயர்வை திரும்ப பெறுவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் ஒப்புக்கொள்வதாக அறிவித்துள்ள போதிலும் அரசாங்கத்தின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக மக்களின் போராட்டம் தொடர்கிறது.

கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின்போது பிரான்ஸின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்றான ஆர் டி ட்ரோம்ப் சேதப்படுத்தப்பட்டதாகவும் இதனால் ஏனைய இடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் நகர அதிகாரிக

ad

ad