புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2018

நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிக தடை

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நுண் கடன் மற்றும்
வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இன்று 28-12-2018 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்துள்ள வருமானமற்று காணப்படுகின்றனர். இவர்களில் பலர் முகாம்களில் தங்கியுள்ள நிலையில் அவர்களிடம் சென்று நுண் கடன் அறிவிடும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அத்தோடு வெள்ளத்தினால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளமையால் விவசாயிகளினால் பெறப்பட்ட கடன்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதனையடுத்தே பிரதமர் தற்காலிகமாக நுண் கடன்கள் மற்றும் வங்கிகடன்களை தற்காலிகமாக அறவிடுவதற்கு தடை விதிக்குமாறு பணித்துள்ளார்.

ad

ad