புதன், டிசம்பர் 05, 2018

புங்கை மண்ணுக்கு பெருமை சேர்த்த ஜனாதிபதி சடடத்தரணி கே .வி.தவராசா


சடடதுறையில் பல்லாண்டு காலம்  சேவையாற்றிய  25  சடடதனிகளை  இன்று  மாலை  ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதி 
சட்டத்தரணியாக்கி  கெள ரவித்துள்ளார் .இவர்களில் 2  தமிழ்சடடதரணிகளும் அடங்குவர் . யாழ்மாவடடம் புங்குடுதீவு மண்ணுக்கு  சொந்தக்காரராகிய   கெளரவ கே வி தவராசா அவர்கள் சுமார்  38  வருடங்களாக சடடதரணியாக  சேவை ஆற்றியுள்ளார் . பிரபலமான  குட்டிமணி தங்கதுரை  வழக்கில்  இவரும்  இவரது  துணைவியாரும் ஆஜராகி  வாதாடி  தமது இளம்வயதிலேயே தமிழ் உலகுக்கும் பிறந்த மண்ணுக்கும் பெருமை தேடிக்கொடுத்தனர் .இதனை தொடர்ந்து  பல்வேறு  அரசியல் கைதிகளின், ஊடகவியலாளர்களின்,சமூக ஆர்வலர்களின் முக்கிய  வழக்குகளில்  பிரசன்னமாகி திறமையினை தனது   வெளிப்படுத்தியுள்ளார் .பல்வேறுபடட அரசியல் கைதிகளின் விடுதலைக்கு  முழுமூச்சாக பணியாற்றி வெற்றி கொண்டுள்ளவர் இவர் .திரு கே வி தவராசா அவர்களை  நாமும்  மனதார  பாராட்டி  மென்மேலும் இவரது சேவை  தொடரட்டும் என வாழ்த்தி நிற்கிறோம்