புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2018

வருகின்றார் ரணில்:திண்டாடுகின்றார் கூரேபதுங்கிக்கொள்வதா என திண்டாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.!

இலங்கைப்பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் கிளிநொச்சிக்கு விஐயம் செய்யவுள்ள நிலையில் அவரை வரவேற்பதா அல்லது பதுங்கிக்கொள்வதாவென்ற குழப்பத்தில் வடக்கு ஆளுநரும் அவரது அதிகாரிகளும் திண்டாடிவருகின்றனர்.கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரடியாக சந்தித்து மக்களுக்கு உதவிப்பொருட்களை வழங்கும் முகமாக நாளை மறுதினம் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அமைச்சர்கள் சகிதம் கிளிநொச்சிக்கு விஐயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.ரணிலின் வருகை தொடர்பில் கடுமையான பிரச்சாரங்களை கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.



இதனிடையே மைத்திரியின் கட்சி முக்கியஸ்தரும் அவரால் வடக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டவருமான ரெஜினோல்ட் கூரே கிளிநொச்சி மற்றும் முல்லைதீவில் சுற்று சுழன்றடித்துவருகின்றார்.

அவருடன் வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி,சிவாஜிலிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,டக்ளஸ் தேவானந்தா போன்றோர் இழுபறிப்பட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் ஏற்கனவே முன்னாள் அமைச்சரான அங்கயன் இராமநாதனோ நாமலுடன் கூட்டு சேர்ந்துவிட ரெஜினோல்ட் கூரேயோ ரணில் மற்றும் அவரது அமைச்சர்களை வரவேற்பதா அல்லது பதுங்கிக்கொள்வதா என திண்டாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad