புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2018

ஜனாதிபதியாக மாறிய ரணில்! அதிர்ச்சியடைந்த மைத்திரி

கடந்த மூன்றரை வருடங்களாக பிரதமராக மாத்திரமல்லாது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணிலே செயற்பட்டார் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.



19ஆம் அரசியலமைப்பின் மோசமான நிலைக்கு அவசரமாக அதனை சமர்ப்பித்த ரணில் மற்றும் அவரது ஆதரவாளர்களே பொறுப்பு கூற வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நீதிமன்ற செயற்பாட்டினை ரணில் தரப்பினர் மேற்கொண்டிருக்கவில்லை என்றால், தற்போது ஏற்பட்டிருக்கும் அனைத்து நெருக்கடிகளும் தீர்க்கப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிடடுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் அனைத்து வழக்குகளும் நிறைவடையும். இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்கும்.

தேர்தல் ஒன்றுக்கு செல்ல முடியும். அப்படி தேர்தலுக்கு செல்ல முடியாதென தீர்ப்பு வழங்கப்பட்டால், பெரும்பான்மை அரசாங்கம் அதிகாரத்திற்கு நான் அனுமதி வழங்க வேண்டும்.

நான் விரும்பிய பிரதமரை நியமித்து அரசாங்கத்தை நடத்தி செல்வேன். ரணிலை தவிர மேலும் 224 பேர் உள்ளனர். அப்படி என்றால் அரசியல் கட்சிகளில் பிரதமராகுவதற்கு ஒருவரேனும் இல்லையா?

கடந்த மூன்றரை வருடங்களாக பிரதமராக மாத்திரமல்ல எனது ஜனாதிபதி அதிகாரத்தையும் ரணில் பயன்படுத்தினார்.

நன்றி கடனுக்காக நான் அதனை கண்டுக்கொள்ளாமல் இருந்தேன். சில நேரங்கள் அவர் என்னை பிரதேச சபை உறுப்பினராக கூட நினைக்கவில்லை. அவ்வாறே வேலை செய்தார் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad