புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2018

கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையில் சந்திப்பு

கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெகினனுக்கும், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய
கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு கைவேலியில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது முன்னாள் போராளிகளது தற்போதைய பாதுகாப்பு மற்றும் இயல்பு நிலை தொடர்பில் உயர் ஸ்தானிகரால் கேட்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழ் தாயகப்பகுதிகளிலுள்ள 89000 பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களுக்கு கனடா அரசு விசேட நலன்சார் வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் என உயர்ஸ்தானிகரிடம் கோரப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காத்திரமான பொறுப்புக்கூறல், தமிழர்களது கௌரவமான தீர்வு முயற்சிகளில் கனடா அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் போராளிகள் சார்பில் கோரப்பட்டுள்ளது.

ad

ad