புதன், டிசம்பர் 12, 2018

மைத்திரியின் கோரிக்கையை கூட்டமைப்பு நிராகரித்தது!

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக இன்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டாம் என சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

இன்று காலை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் தீடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பிற்கு அழைத்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய சந்திப்பில் நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக இன்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டாம் என சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இதனi நிராகரித்துள்ளனர் தங்களது தீர்மானத்தை மாற்ற முடியாது என குறிப்பிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.