புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2018

இரணைமடுவை தமிழ் மக்களிடம் கொடுத்தார் மைத்திரி


கொழும்பு அரசியல் குழப்பங்களின் மத்தியில் சுற்றுலாவாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ளார்.

இரணைமடுவை கிளிநொச்சி மக்களுக்கு வழங்குவதாக தெரிவிக்கும் சான்றிதழ் ஒன்றினை தமிழரசு கட்சி பிரதேச சபை உறுப்பினரும் இரணைமடு கமக்காரர் குழு பிரதி நிதியும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் முக்கிய ஆதரவாளருமான நபரிடம் மைத்திரி கையளித்திருந்தார்.

இதேவேளை மைத்திரி வடக்கிற்கு வருகின்ற போதெல்லாம்அ முண்டியடித்து வரவேற்கின்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இம்முறை எட்டிக்கூட பார்த்திருக்கவில்லை.

மைத்திரியுடன் அவரது முன்னாள் அமைச்சர்களாக அங்கயன் இராமநாதன்,நிமால் சிறிபால டி சில்வா மற்றும் ஆளுநர் கூரே,வடமாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட குழு பங்கெடுத்திருந்தது.

எனினும் உள்ளுர் தரப்புக்கள் பெரிதும் இன்றைய நிகழ்வை புறக்கணித்திருந்தன.
இன்று இரணைமடுக்குளத்தின் வான்களை திறந்துவிடும் நிகழ்விற்கு மைத்திரி வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும் நேற்றிரவுடன் நீர்மட்டம் 36 அடியினை தாண்டிய நிலையில் நேற்றிரவே வான திறக்கப்பட்டுவிட்டமை குறிப்பிடத்தக்கது

ad

ad