ஞாயிறு, டிசம்பர் 16, 2018

ஜனாதிபதியே தீர்மானிப்பார்’

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு புதிய அரசாங்கத்துடன் இணையுமா இல்லையா? என்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானிப்பாரென கட்சியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும் புதிய அரசாங்கத்துடன் இணையமாட்டோம் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நேற்று வரை தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறும் என்றும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.