புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2019

வலி.வடக்கில் 45 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ் வலி.வடக்கில் 45 ஏக்கர் காணி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து இன்று (22) விடுவிக்கப்பட்டது.
தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணியும், ஒட்டகபுலத்தில் 15 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டது.
குறித்த காணிகள் நேற்று (21) விடுவிக்கப்பட்ட போதும் இன்று (22) காலையே காணி உரிமையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டது.
தையிட்டி தெற்கில் ஜே-249, ஜே-250 இல் விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள அனேகமான வீடுகள் இராணுவத்தினர் பயன்படுத்தியதால் நல்ல நிலையிலேயே உள்ளது. சில வீடுகளை திருத்தி மாற்றியுள்ளனர். அத்துடன் வீடு ஒன்றை அலுவலகமாக மாற்றியுள்ளதுடன் சுவரில் சிங்கள மன்னர்களின் வரலாற்று படங்களை புடைப்பு சிற்பங்களாக வரைந்துள்ளனர்.
மேலும் காணியில் வளர்ந்த அரச மரத்தில் புத்தர் சிலை வைத்து வணங்கியுள்ளனர். எனினும் தற்போது புத்தரை அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர். கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்றும் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது.

ad

ad