புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2019

சுரேன் இராகவனை வரவேற்ற விக்கி!

முதன்முறையாக தமிழர் ஒருவர் வட மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை வரவேற்கத்தக்க விடயம் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

முதன்முறையாக சிறந்த கல்விப் புலமையும் இனப்பிரச்சினை தொடர்பில் அரசியல் அறிவும் கொண்ட கலாநிதி சுரேன் ராகவனை நியமித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலாநிதி சுரேன் ராகவனின் அறிவும் புலமையும் அவரை சரியான முறையில், ஜனாதிபதிக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ அன்றி மக்களுக்காக சேவை செய்வதற்கு அவரை வழிநடத்தும் என எதிர்பார்ப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு உண்மையான அக்கறை இருக்குமானால், இணைந்த வடக்கு- கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

ad

ad