ஞாயிறு, ஜனவரி 13, 2019

பிரெக்ஸிற் தொடர்பில் பிரதமர் மே எச்சரிக்கை!

பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாவிட்டால், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையற்ற தன்மையை வெளிக்காட்டுவதாக அமையுமென பிரதமர் தெரேசா மே

கூறியுள்ளார்.

அத்தோடு, அது மன்னிக்கமுடியாத பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரெக்ஸிற் ஒப்பந்த வாக்கெடுப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், சண்டே எக்ஸ்பிரஸிற்கு வழங்கியுள்ள செவ்வியில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

உடன்பாடற்ற பிரெக்ஸிற்றால் அதிக ஆபத்து வரப்போவதில்லையென்றும் பிரதமர் கூறியுள்ளார்.

நாட்டின் எதிர்காலத்திற்கான முக்கிய தருணமாக இந்த வாக்கெடுப்பு அமையவுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

பிரெக்ஸிற்றிற்கு ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், அதனை நிறைவேற்ற பிரித்தானிய நாடாளுன்றத்தின் அங்கீகாரம் அவசியம். அதற்கான முக்கிய கட்டத்தை பிரதமர் தற்போது எதிர்நோக்கியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.