புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2019

தற்போதைய பரபரப்பான  செய்தி
--------------------------------------------------------
தீவகம் சாட்டி குடிநீர் கிணறுகளில் கழிவு எண்ணெய் ஊற்றிய மண்கடத்தல்காரர்களின் பாவச்செயல்
சாட்டியில் இரு கிணறுகளில் கழிவு ஒயிலை ஊற்றிய மண்கடத்தல்காரர்கள் :
நான்கு தினங்களுக்கு முன்பு சாட்டியிலுள்ள வேலணை பிரதேச சபைக்கு சொந்தமான கிணறொன்றில் தனது பௌசரில் நீர் ஏற்றச்சென்றுள்ளார் புங்குடுதீவு நபரொருவார் . அக்கிணற்றிலிருந்து சுமார் 30 மீற்றர் தூரத்தில் லான்ட்மாஸ்ரர் வாகனத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளும் கும்பலை அவதானித்துள்ளார் . உடனே அந்த மண் கொள்ளை கும்பலின் தலைவர் என்று கூறப்படுகின்ற சீவரத்தினம் என்பவர் கிணற்றின் அருகே வந்து இங்கே தண்ணீர் அள்ளக்கூடாதென்றும் தாக்குதல் நடாத்துவோமென்றும் கூறியுள்ளார் . அதற்கு பதிலளித்த புங்குடுதீவு நபர் நீங்களும் உங்களோடு இணைந்த ஒரு பிரதேச சபை உறுப்பினரும் தொடர்ச்சியாக கள்ள மண் அள்ளுவதை நாம் அவதானித்து பொலிசுக்கு தகவல் வழங்கி வருவதாலேயே குடிநீர் அள்ளுவதை தடைசெய்ய முயற்சிக்கிறீர்கள் என்பது நிரூபணமாகியுள்ளது . நான் இதை உடனடியாக சிவில் குழுவினர் ஊடாக ஊர்காவற்துறை பொலிசுக்கு தெரிவிப்பேனென்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார் . அடுத்தநாள் அதிகாலையில் மேற்படி பிரதேச சபை கிணற்றிலும் , சாட்டி துயிலும் இல்லமருகேயுள்ள தனியார் கிணற்றிலும் கழிவு ஒயிலை ஊற்றிய மேற்படி சீவரத்தினம் குழுவினர் புங்குடுதீவு பௌசர் உரிமையாளரே கழிவு ஒயிலை கிணற்றுக்குள் ஊற்றியதாக பொய்யான செய்தியை பரப்பியுள்ளனர் . ஆனாலும் மேற்படி கிணற்றின் உரிமையாளராகிய புளியங்கூடலை சேர்ந்த ஜீவா எனும் தண்ணீர் பௌசர் வியாபாரி கள்ள மண் கடத்தல்காரரான சீவரத்தினம் என்பவர் மீதே தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் , ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பு தன்னோடு முரண்பட்ட சீவரத்தினம் எனும் நபர் தனது கிணற்றுக்குள் விசம் அல்லது ஒயிலை ஊற்றுவேனென்று சவால் விட்டதாகவும் ஊர்காவாற்துறை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார் .

ad

ad