புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2019

அல்பேர்ட்டாவில் கடும்குளிர் – 211ற்கான அழைப்புக்கள் அதிகரிப்பு

அல்பேர்ட்டாவின் எட்மண்டனில் கடும்குளிர் காலநிலை நிலவிவரும்நிலையில் உதவிக்கான அழைப்புக்கள் அதிகரித்துள்ளதாக 24/7 நெருக்கடிநிலை தொடர்பான குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த எட்மன்டன் பிராந்தியத்தின் மனநலச் சங்க செய்தித் தொடர்பாளர், ஒட்டுமொத்த அழைப்பு முன்னரைவிட தற்போது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.

அத்தோடு அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஏற்ப உதவிகளை வழங்குவதற்காக மேலதிக ஊழியர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.


24/7 நெருக்கடிநிலை தொடர்பான குழு, அவசரகால நிலைமையில் உடல்ரீதியிலான மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது.

இந்த நிலையில் பொதுமக்கள் குறித்த சேவையை அணுக, 211-ஐ அழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

ad

ad