புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2019

கீரிமலை மஹி;ந்த மாளிகை சுற்றுலா அமைச்சிடம்?

வலி.வடக்கு கீரிமலை உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள மஹிந்தவின் மாளிகையினை மத்திய அரசின் கீழுள்ள சுற்றுலா அமைச்சு பொறுப்பேற்கவுள்ளது.கீரிமலையில் அமைக்கப்பட்டு தற்போது கடற்படையினர் வசமுள்ள மாளிகையினையே சுற்றுலா அதிகார சபையினரிடம் கையளிக்குமாறு மைத்திரி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே 2015ஆம் ஆண்டு மைத்திரி யாழ்.வருகை தந்திருந்த வேளை அப்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறித்த மாளிகையினை வடக்கு மாகாண சபையிடம் கையளிக்க கோரியிருந்தார்.


ஆனால் அது பற்றி வாயே திறக்காதிருந்த இலங்கை அரசு தற்போது மத்திய அரசின் கீழுள்ள சுற்றுலா அமைச்சு பொறுப்பேற்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

கடற்படையினர் வசமுள்ள கீரிமலைப் பிரதேசம் தொடர்பில் ஆரயப்பட்டவேளையில் அங்கே அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளட்ட பிரதேத்தினை முழுமையாக விடுவித்து அதில் மாளிகையினை மட்டும் சுற்றுலா அதிகார சபையினரிடம் கையளிப்பதற்கும் எஞ்சிய நிலத்தினை நிலத்தின் உரிமைநாளர்களிடம் கையளிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது

ad

ad