புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2019

பாலச்சந்திரனோ, இசைப்பிரியாவோ அப்பாவிகள் அல்ல - இனப்படுகொலையாளி மகிந்த

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனோ, இசைப்பிரியாவோ அப்பாவிகள் அல்ல, ஆயுதம் தாங்கிய போராளிகள் என்றும், அவர்களை இராணுவத்தினர் சுட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான தமிழினப் பொடுகொலையாளி மகிந்த ராஜபக்ச.

பெங்களூருவில் செய்தியாளர்கள் பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா படுகொலைகள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே, அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.



“பாலச்சந்திரன் சிறுவன் அல்ல. அவர் ஒரு போராளி. அவருக்கு 5 மெய்ப்பாதுகாவலர்களைப் பிரபாகரன் வழங்கியிருந்தார்.

இசைப்பிரியாவும் ஆயுதம் தூக்கிய ஒரு போராளி. அவருக்குப் புலிகள் அமைப் பினர் சூட்டிய பெயர்தான் இசைப்பிரியா.

இவர்கள் உள்ளிட்ட பல போராளிகளின் உயிரிழப்புகளுக்குப் புலிகளே பொறுப்புக்கூற வேண்டும். நாம் பொறுப்பல்ல.

இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்த புலிகள் அமைப்பின் 12, 500 போராளிகளைப் புனர்வாழ்வு அளித்து நாம் விடுதலை செய்துள்ளோம்

ad

ad