புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2019

மடத்துவெளி ஊரதீவு தெருமின்விளக்கு திடடம்

அன்பு உறவுகளுக்கு வணக்கம்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மடத்துவெளி ஊரதீவு  தெருமின்விளக்கு திடடம் 
4 20 000 ரூபா  செலவில் 77  மின்குமிழ்கள் --மற்றும்  உதிரிபாகங்கள், மின்சார சபை  செலவு 
இந்த மொத்த செலவில்  பாதியை  நானும் மீதியை  என் உறவுகளான இராசமாணிக்கம் இரவீந்திரன் ,அருணாசலம் திகிலழகன் ,குமாரசாமி  சுரேஷ் , சுப்பிரமணியம்  சந்திரன்-பாசல்  , என் எஸ் சிவா  பாசல் ,கதிர்காமு உலகேஸ்வரன்  ஜெர்மனி ஆகியோர்  பங்கு  போட்டுக்கொண்டுள்ளனர்  உறவுகளுக்கு  புங்குடுதீவில் சார்பில்  நன்றிகள் .இன்னும் 20 மின்குமிழ்கள்  பொருத்தப்படவுள்ளன ,முழுமையான  வரவு செலவு கணக்கறிக்கை  பின்னர்  தரவுள்ளேன் 
எமது வீதிகளின் மின்விளக்கு திட்டத்தில் இன்று மேலதிகமாக 32 மின்விளக்குகளை 7 ஆம் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள மடத்துவெளி, ஊரதீவு , வரதீவு முழுவதும் உள்ள அனை த்து வீதிகள், சிறிய தெருக்கள் ,ஒழுங்கைகள் எங்கும்   பொருத்தி இருக்கிறோம் . இப்போதைக்கு பாணாவிடை சிவன் ஆலய மதகுரு மதிப்புக்குரிய ரூபன் சர்மாவின் முகநூலில் காணொளி களை காண முடியும் . இந்த ஒழுங்குகளை பிரதேச சபை உறுப்பினர் திருமதி சா. யசோதினி  அவர்கள் ஊரதீவு சனசமூக நிலைய  செயலாளர்  செல்வி .சி.எக்ஸனா அவர்களின் ஒத்துழைப்புடன் செய்துமுடித்திருக்கிறார் .மேலதிக விபரங்களை பின்னர் தருகிறோம் 
1.வரதீவு -5 மின்குமிழ்கள் ---
திரு அ .சண்முகநாதன் (கண்ணாடி ) அவர்களின் வீட்டு வடக்கு வேலியை ஒட்டியுள்ள வரதீவுக்கான வீதி.
 2. பெத்தப்பு கோவில்--பானாவிடை சிவன் கோவில் வீதி   மின்குமிழ்கள் -----அறிவகத்துக்கு அருகில் மடத்துவெளி ஊரதீவு கேரதீவு (சங்குமா லடி)பிரதான வீதியில் இருந்து பிரிந்து பாணா விடை சிவன் ஆலயத்துக்கு செல்லும் பெத்தப்பு கோயில் வீதியில் முதலில் பாதி அளவுக்கு பொருத்தி இருந்தோம் இப்போது தொடர்ந்து பாணாவிடை சிவன் ஆலய மு ன்றல் வரை பொருத்தி முடித்து இருக்கிறோம்
3. மடத்துவெளி கிழக்கு தூண்டி ஞான வைரவர்  வீதி  தொடக்கம் கடற்கரை வீதி வேளாங்கண்ணி  கோவில் வரை 21  மின்குமிழிகள் ----மடத்துவெளி ஊரதீவு சந்தி  மலர்  கடையடி  முதல்  கிழக்கே  செல்லும் செம்மண் வீதி  .இது  கிழக்கு கடற்கரை  ஞான வைரவர்  ஆலயம்  மற்றும் கடற்படை  முகாம்   தொடர்ந்து கிழக்கு கடல் கரை  விளிம்பில்தெற்கு  நோக்கி வேளாங்கண்ணி  ஆலயம் வரை  செல்கிறது 

ad

ad