புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2019

குறைகேள் விசாரணை குழு ஸ்தாபிக்க தீர்மானம்

வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பிலும் பால்நிலை சமத்துவம் இல்லாமை தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு, அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு குறைகேள் விசாரணைக் குழுவொன்றை ஸ்தாபிக்க வடமாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார்.

மூன்று பேரடங்கிய இந்த விசாரணைக் குழுவில், இரு பெண்கள் உள்ளடக்கப்படவுள்ளதுடன், அதில் ஒருவர் முறைப்பாட்டாளர்களால் முன்மொழியப்பட்டவராகவும் இருப்பார்.

இதேவேளை, வட மாகாணத்தின் கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கில் வட மாகாண கல்வி அமைச்சுக்கு தமது ஆலோசனைகளையும் சரியான வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்கு 15 பேரடங்கிய மூத்த கல்விமான் சபையொன்றை ஸ்தாபிப்பதற்கும் ஆளுநர் தீர்மானித்துள்ளார்.

இந்த சபைக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்

ad

ad