புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2019

உறைபனி காரணமாக ஒன்ராரியோ ஸ்தம்பிதம்

தென்மேற்கு ஒன்ராரியோ, வின்ட்சர் பகுதிகளில் நிலவும் கடுமையான உறைபனி காரணமாக பாடசாலை வாகனச்சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கடுமையான பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசிவருகின்ற நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவியது.

இதன் காரணமாக வீதிகளில் போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்த நிலையில், தென்மேற்கு ஒன்ராரியோ, வின்ட்சர் பகுதியைச் சுற்றி அமைந்துள்ள பாடசாலை பேருந்துச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வின்ட்சர், எசெக்ஸ், சார்னியா-லாம்ப்டனில், சத்தாம்-கென்ட், லண்டன், மிடில்செக்ஸ், எல்ஜின், ஒக்ஸ்போர்ட் ஆகிய அனைத்து பகுதிகளுக்குமான பாடசாலை பேருந்துச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன

ad

ad