புதன், மார்ச் 13, 2019

மக்களவை தேர்தலில் 1 தொகுதி ஒதுக்கி அதிமுக-தமாகா இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது


அதிமுக கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு 5, பா.ம.க.வுக்கு 7, தே.மு.தி.க.வுக்கு 4, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக, நேற்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசி கூட்டணிக்கு அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் இன்று சென்னையில் கிரவுன் பிளாசா ஓட்டலில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதிமுக- தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது.
21 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு த.மா.கா ஆதரவு அளிக்கும் என ஜி.கே.வாசன் கூறினார்.