03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

ஞாயிறு, மார்ச் 17, 2019

1500 கி.மீ தொலைவிலுள்ள தீவுக்கு அனுப்பப்படவுள்ள 57 அகதிகள்


மருத்துவ உதவி தேவைப்படும் 57 அகதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என அஞ்சுவதாக கூறியுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், அவர்களை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதற்கு பதிலாக கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பப்போவதாக கூறியிருக்கிறார்.

தனது கடுமையான எல்லைக்கட்டுப்பாட்டு கொள்கைகளின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சித்த அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்களை மனுஸ் மற்றும் நவுருத்தீவுப்பகுதிகளில் தடுத்து வைத்திருக்கின்றது ஆஸ்திரேலிய அரசு. அங்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் கடும் மனநல பாதிப்புக்கு ஆளாவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் பல்வேறு மட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தமாக மாறியது.

இவ்வாறான சூழலில், மருத்துவ உதவி தேவைப்படும் அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வரும் வகையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளால் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ வெளியேற்ற மசோதா ஆளும் லிபரல் அரசின் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியது. இது ஆளும் லிபரல் அரசுக்கு ஏற்பட்ட வரலாற்று தோல்வியாகவே பார்க்கப்பட்டது.

இதை எதிர்கொள்ளும் விதமாக, இச்சட்டத்தில் உள்ள பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்தி அகதிகளை கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பும் திட்டத்தை லிபரல் அரசு அறிவித்தது.

இந்த 57 ஆண்கள் (அகதிகள்) மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த அடிப்படையில் ஆஸ்திரேலியாவிலிருந்து 1,550 கி.மீ. தொலைவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவுக்கு மருத்துவ தேவைப்படும் இந்த அகதிகள் அனுப்ப வைக்கப்படுகின்றனர்.

இதை விமர்சித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷார்டன்,“இது மாரிசனின விளம்பர யுக்தி. தேவையில்லாமல் கிறிஸ்துமஸ் தீவில் பணம வீணடிக்கப்படுகின்றது,” என அவர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கிறிஸ்துமஸ் தீவு முகாம் கடந்தாண்டு ஆஸ்திரேலிய அரசினால் மூடப்பட்டது. அண்மையில், மருத்துவ வெளியேற்ற மசோதா நிறைவேறிய நிலையில், இந்த முகாமை மீண்டும் திறப்பதாக ஆளும் லிபரல் அரசு அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.