திங்கள், மார்ச் 04, 2019

தி.மு.க.வுடன் உடன்பாடு- இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு


தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்டு தொகுதி பங்கீடு குறித்து முதல் சுற்று பேச்சுவார்த்தை முடித்துள்ளது. இன்று இந்திய கம்யூனிஸ்டு தலைவர்கள் முத்தரசன், சுப்பராயன் இருவரும் சென்று தி.மு.க. தலைவர்களுடன் 2-வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார்கள்.

அப்போது தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டது. இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை, தென்காசி, நாகை ஆகிய 3 தொகுதிகளில் இரண்டை ஒதுக்க இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த தகவலை இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்