புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2019

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் தமிழ் மக்களுக்கு ஏற்புடையதல்ல– சுரேஸ்


2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஏற்புடையதல்ல என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தேர்தலை அடிப்படையாகக்கொண்டே வரவு–செலவு திட்டத்தில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த சலுகைகள் மக்களை சென்றடையுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்து அவர், “2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் வடக்கு கிழக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்ளவதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கான பணம் இலங்கை அரசிடம் தற்போது இல்லை. கடன் பெற்றே இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

சில நேரங்களில் கடன் பெறமுடியாத பட்சத்தில் எமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad