புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2019

வெளியானது மகிழ்ச்சியான நாடுகள் விரிப்பு! முதலிடத்தில் 5 நாடுகள்


அனைத்துலக நாடுகளில் மக்ககள் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் ஆய்வறிக்கை விரிப்பு வெளியாகியுள்ளது. இவ்விரிப்பில் முதல் இடத்தை ஐந்து நாடுகள் பிடித்துள்ளது. டென்மார்க், பின்லாந்து, நோர்வே, ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து என்பனவே அந்த நாடுகள்.

இவ்விரிப்பின் அடுத்த நிலையில் அமொிக்கா மற்றும் பித்தானியா என நாடுகளின் விரிப்பு தொடர்கின்றது. 10 மதிப்பெண்களில் 7.5 மதிப்பெண்களைப் பெற்று ஐந்து நாடுகள் முதல் இடத்தை பெற்றன. 6.9 மதிப்பெண்களைப் பெற்று அமொிக்கா இரண்டாம் இடத்தையும், 6.7 மதிப்பெண்களைப் பெற்று பிரித்தானியா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

அதிகளவு பண வருமானம், அரச நலத்திட்டங்கள், உடல் நலத்துடனான நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழுகின்றனர் எனக் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.


சர்வதேச நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் டென்மார்க், பின்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய 5 நாடுகளில் மக்களின் வாழ்க்கை தரம் அமோகமாக இருப்பது தெரியவந்தது.

அதன்மூலம் உலகில் மிக மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் மேற்கண்ட டென்மார்க் உள்ளிட்ட 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இவை 10-க்கு தலா 7.5 புள்ளிகள் பெற்றுள்ளன.

இதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளன. அமெரிக்காவுக்கு 6.9 புள்ளிகளும், இங்கிலாந்துக்கு 6.7 புள்ளிகளும் கிடைத்துள்ளன.

வடக்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் மிக அதிக அளவில் பணம் சம்பாதிக்கின்றனர். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ்கின்றனர். அரசும் நல்ல திட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றுகிறது. அதன்மூலமே அந்த நாடுகளில் வாழும் மக்கள் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நடத்துகின்றனர் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ad

ad