www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், மார்ச் 05, 2019

ம.தி.மு.க. - திருச்சி, ஈரோடுவிடுதலை சிறுத்தைகள் - சிதம்பரம், விழுப்புரம்.8 கட்சிகள் இணைந்த தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியாகிறது

ம.தி.மு.க. - திருச்சி, ஈரோடுவிடுதலை சிறுத்தைகள் - சிதம்பரம், விழுப்புரம்.8 கட்சிகள் இணைந்த தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியாகிறது ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் உத்தேச பட்டியல்
8 கட்சிகள் இணைந்த தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியாகிறது ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் உத்தேச பட்டியல்
Facebook Twitter Google+ Mail Text Size Print
8 கட்சிகள் இணைந்துள்ள தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியாகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்படும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் வலுவான கூட்டணியை தி.மு.க. அமைத்துள்ளது. அந்தக் கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஏற்கனவே, காங்கிரஸ் கட்சிக்கு 10 (புதுச்சேரி உள்பட), இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

இதைவைத்து பார்க்கும்போது, தமிழகத்தில் தி.மு.க. 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும் என்று தெரிகிறது. சின்னத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, 25 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.

மேலும், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது உத்தேச பட்டியல் அடிப்படையில் தெரியவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தி.மு.க. (19 தொகுதிகள்) - வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி.

காங்கிரஸ் (10 தொகுதிகள்) - புதுச்சேரி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், ஆரணி, மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி.

ம.தி.மு.க. (2 தொகுதிகள்) - திருச்சி, ஈரோடு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2 தொகுதிகள்) - மதுரை, திருப்பூர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2 தொகுதிகள்) - நாகப்பட்டினம், தென்காசி.

விடுதலை சிறுத்தைகள் கட்சி (2 தொகுதிகள்) - சிதம்பரம், விழுப்புரம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1 தொகுதி) - ராமநாத புரம்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (1 தொகுதி) - பொள்ளாச்சி

இந்திய ஜனநாயக கட்சி (1 தொகுதி) - கள்ளக்குறிச்சி.

இது உத்தேச பட்டியல் தான். இதில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.