புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2019

அமைச்சர் ரிசாட் 86 கோடி ரூபா ஊழல்.!


கடந்த மஹிந்த அரசாங்கத்தில் ஊழலுக்கு பஞ்சம் இல்லை என்றுதான் கூறவேண்டும்..

மஹிந்தவின் குடும்பம் சுமார் 5000 கோடிரூபாய்கு ஊழல் செய்துள்ளது..
மஹிந்தவின் விசுவாசிகள் இது வரை 734 கோடி ரூபாய்கு ஊழல் செய்துள்ளதாக தப்போதைய அரசாங்கம் கூறுகின்றது..

கடந்த மஹிந்த அரசங்கத்தில் மீள்குடியேற்ற அமைச்சராகவும் பிற்பாடு கைத்தொழி வர்த்தக அமைச்சராகவும் இருந்தார். .

மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது அமைச்சர் ரிசாட் மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச காணிகள் ஆள்லில்லா தனியார் காணிகள் என பல ஏக்கர்களை தன்வசப்படுத்தி கொண்டார். இதற்கு முழுமையாக துணைநின்றது மஹிந்த அரசும் பஸில் ராஜபக்ஸவும்.

மன்னார் மாவட்டத்தில் மக்களின் காணிகளை பலவந்தமாக பிடித்துவந்தார் எதிர்ப்பவர்கள் மீது பொய் கேஸ் போட்டு பொலிஸ் நீதிமன்றம் என்று அழையவிட்டார்..

உதாரணம் தாராபுரத்தில் அமைந்துள்ள அமைச்சர் ரிசாட்டின் பங்களாவின் காணி வேறு ஒரு நபருடையது. இன்றும் அது நீதி மன்றத்தில் வழக்கு உள்ளது. அந்த காணியை தான் கைப்பற்றவிலை அதை கைப்பற்றியவர் சுனா எங்கின்றவர் என்று நீதிமன்றத்தில் வழக்கு போகின்றது..

சுனாவின் இடம் என்றால் எப்படி ரிசாட் பங்கலா கட்டமுடியும் ? இவ்வாறு தன் விசுவாசிகளின் பெயரின் பல ஏக்கர் காணிகளை தன் வசப்படுத்தி வைத்துள்ளார்..

மஹிந்த ஆட்சியில் ஊழல் ராஜாவாக வலம் வந்தார் அமைச்சர் ரிசாட். மஹிந்த ஆட்சியில் கைத்தொழில் வர்த்தக அமைச்சராக இருந்த அமைச்சர் ரிசாட் ஆட்சி மாற்றத்தின் பின்னரான அரசாங்கத்தில் கடுமையாக போராடி அந்த அமைச்சை மீண்டும் பெற்றார்..

இதற்கான காரணம் என்ன ? அந்த அமைச்சின் ஊடாக பல கோடி ஊழல்களை அமைச்சர் ரிசாட் செய்துள்ளார். அத்தோடு மக்கள் பணத்தையும் தவராக பயன்படுத்தி உள்ளார். இதனால் தான் மீண்டும் அந்த அமைச்சை போராடி பெற்றார்..

தன் ஊழல்களை மறைப்பதற்கான பல வழிமுறைகளை அமைச்சர் ரிசாட் செய்து தோற்றுப்போய் உள்ளார்..

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மன்னார் வன்னி மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலாளர் காரியாலயத்தில் அமைச்சர் ரிசாட் தொடர்பான சகல விபரங்களையும் சொத்துக்களின் விபரங்களை CID யினர் பெற்றுச்சென்றுள்ளனர்..

அதனால் தான் அமைச்சர் ரிசாட் இந்த வாரம் அவசர அவசரமாக வன்னி மன்னார் மாவட்டத்திற்கு சென்று பழைய அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைத்தும் தன்னை அரசு கைதுசெய்ய உள்ளது என்றும் அனுதாபம் தேடிவந்தார்..

கடந்த வாரம் கைத்தொழில் வர்த்தக அமைச்சில் பணியாற்றிய ஒன்பது உயர் பதவி வகித்தவர்களை CID யினர் விசாரித்து வந்தனர்..

அந்த விசாரணையின் போது பல முக்கிய தகவல் ஆதாரங்கள் CID வசம் சிக்கி உள்ளது. அத்தோடு அந்த ஒன்பது நபர்களில் இருவர் தகுதி இல்லாமல் அதாவது போதிய படிப்பு சான்றிதழ்கள் இல்லாமல் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர்..

எனவே அவர்கள் ஆறுவருடம் பெற்ற ஊதியத்தை மீள அரசுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று CID யினர் உத்தரவிட்டுள்ளனர்.

இதுவரை CID பெற்ற ஆதாரங்களின் படி 86 கோடி ரூபாய் ஊழலும் பல ஏக்கர் காணிகளும் அகப்பட்டிருக்கின்றது. அமைச்சர் ரிசாட்டின் கார் ரைவரின் பெயரில் சுமார் 470 ஏக்கர் காணி உள்ளது..

எந்த நாட்டிலாவது 470 ஏக்கர் காணி உள்ள ஒருவர் 15000 ரூபா சம்பளத்திற்கு ரைவராக வேலை பார்ப்பாரா ? அமைச்சர் ரிசாட் ஊழல் விவகாரம் அமைச்சர் ரிசாட்டை கைது செய்வதற்கான அனுமதியை ஜனாதிபதியிடம் CID யினர் எதிர்பார்த்துள்ளனர்..

வெளிநாடு சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பி உள்ளார். எப்படியும் அடுத்த வாரமலவின் அமைச்சர் ரிசாட் கைதாகலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ad

ad