புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2019

கிழியும் முகமூடி: புறக்கணித்த குடும்பங்கள்


இலங்கை அரசின் பிரதிநிதியாக வடக்கு ஆளுநர் சுரேன் இராகவன் ஜெனீவா செல்லவுள்ள நிலையில் தமிழ் ஆளுநர் முகமூடி கிழியத்தொடங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று முன்தினம் ஆளுநரை சந்திப்பதற்கு முதலில் விருப்பம் தெரிவித்திருந்த போதும் இறுதியில் அதனை கைவிட்டுள்ளனர்.

இதனிடையே சந்திப்பிற்கு நேரத்தினை ஒதுக்கித் தருமாறு அண்மைக்காலங்களில் மும்முரமான போராட்டங்களை விற்கும் தரகராகிய யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் ஊடாகவும் ஊடகவியலாளர்(?) ஒருவர் ஊடாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் கோரிக்கையினை முன் வைத்திருந்ததாக ஆளுநர் அலுவலகம் இன்றிரவு தெரிவித்துள்ளது. ஆனாலும் நேற்று முன்தினம் ஆளுநர் கொழும்பில் இருந்தமை காரணமாக அன்றைய தினத்தில் நேரத்தை ஒதுக்க முடியவில்லை. இதன் காரணமாக நேற்று வியாழக்கிழமை காலை அவர்களை சந்திப்பதற்கான நேரத்தினை ஆளுநர் ஒதுக்கியிருந்ததுடன் அதற்காக யாழ்ப்பாணத்திற்கு கௌரவ ஆளுநர் வருகை தந்திருந்தததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் அவர்கள் ஆளுநரை சந்திப்பதற்கு வருவதாக உறுதிப்படுத்திய போதிலும் இறுதி நேரத்திலேயே வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தாம் ஆளுநரை சந்திக்க வரவில்லையென அறிவித்திருந்தனர். இதன் காரணமாக ஆளுநரால் அவர்களை சந்திக்க முடியவில்லை என்பதோடு அவர்களின் கோரிக்கைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொள்ள முடியவில்லையெனவும் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களையும் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற நிலைப்பாட்டிலே இருக்கின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உண்மையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களில் ஒருசாராரை இலண்டனில் இருந்து செயற்படும் நபர்கள் சிலர் ஆளுநரை சந்தித்து தமக்கு தீர்வு பெற்றுதர கோரும் நாடகமொன்றை அரங்கேற்ற முற்பட்டிருந்தனர். அதற்கான முகவராக ஆளுநரது செயலாளரான செவ்வேள் என்பவர் செயற்பட்டிருந்தார்.

எனினும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களில் பெரும்பாலானோர் இதனை எதிர்த்ததுடன் ஊடகவியலாளர்களை சந்தித்து ஆளுநருக்கு முண்டு கொடுப்பதை அம்பலப்படுத்தப்போவதாகவும் எச்சரித்திருந்தனர்.

இதனையடுத்தே ஆளுநருடனான சந்திப்பு இரத்தாகியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்

ad

ad