புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2019

நாடாளுமன்ற தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சிசட்டத்தரணி தவராசா தலைமையில் தேர்தல் களம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையின் நிர்வாகத்தெரிவும் , கலந்துரையாடலும் நேற்று

மாலை பம்மபலப்பிட்டி அரச தொடர்மாடி சனசமூக நிலையத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா mp , பொதுச்செயலாளர் திரு . துரைராசசிங்கம் ( முன்னைநாள் கிழக்கு மாகாண அமைச்சர் ) ஆகியோரின் பங்குபற்றுதலோடு நடைபெற்றது .

கடந்த ஏழு வருடங்களாக தலைவராக செயற்பட்டிருந்த திரு . வே. தவராசா இம்முறை தான் செயற்குழு உறுப்பினராக மாத்திரமே செயற்பட எண்ணியுள்ளதாகவும் வேறொருவரை தலைவராக தெரிவுசெய்யுமாறும் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலும் ஜனாதிபதி சட்டத்தரணி kv தவராசா ( தமிழ் அரசுக் கட்சியின் சட்டத்துறை செயலாளர் ) மீளவும் ஏகோபித்த ஆதரவோடு தலைவராக தெரிவுசெய்யப்பட்டார் .

செயலாளராக இளம் சட்டத்தரணி ஆனோல்ட் பிரியந்தன் , துணைத்தலைவராக திருமதி . மிதிலா தெரிவு செய்யப்பட்டனர் . கொழும்பு தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு . இரகுபதி பாலசிறீதரன் , சமூக ஆர்வலர் திரு . இரட்ண வடிவேல் போன்றோரும் நிர்வாக குழு உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

எதிர்வருகின்ற மாகாண , நாடாளுமன்ற தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் சட்டத்தரணி தவராசா தலைமையில் தேர்தல் களம் காணவேண்டுமென்று கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

ad

ad