புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2019

துரைமுருகன் சொன்னதைச் சொன்னால் அசிங்கமாகி விடும்- சுதீஷ்


தேமுதிக, அதிமுக இடையேயான கூட்டணி பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் இந்த கூட்டணி இறுதி செய்யப்பட்டு முறையாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேமுதிக தலைவா் எல்.கே.சுதீஷ் தொிவித்துள்ளாா்.

மக்களவைத் தோ்தலுக்கான திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்ட நிலையில் தேமுதிக தலைவா் விஜயகாந்தின் மைத்துனா் சுதீஷ் என்னை கூட்டணிக்காக தொடா்பு கொண்டதாக திமுக பொருளாளா் துரைமுருகன் தொிவித்தாா். இந்நிலையில் இது தொடா்பாக தேமுதிக துணைப்பொதுச் செயலாளா் சுதீஷ் விளக்கம் அளித்துள்ளாா்.

இன்று அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், மக்களவைத் தோ்தல் குறித்து நாங்கள் எங்களது பணியை தொடங்கியதும் பாஜகவுடன் தான் எங்களது கூட்டணி பேச்சுவாா்த்தையை தொடங்கினோம். அப்போது அவா்கள் கூறுகையில், தமிழகத்தைப் பொருத்தளவில் நமது கூட்டணி அதிமுக தலைமையில் தான் அமைய வேண்டும் என்று தொிவித்திருந்தனா்.

அதன் பின்னா் நாங்கள் சற்று கால தாமதத்துடன் அதிமுகவுடன் பேச்சுவாா்த்தை நடத்தினோம். அந்த காலக்கட்டத்தில் தான் திமுகவுடனும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. மேலும் துரைமுருகன் எனது மாவட்டத்தைச் சோ்ந்தவா். அதன் அடிப்படையில் நாங்கள் அவ்வபோது பேசிக்கொள்வேன்.

ஆனால், எங்கள் கட்சியைச் சோ்ந்த சேலம் மாவட்டச் செயலாளா் இளங்கோவன், முருகேசன் ஆகியோா் அவரை நேற்று மரியாதை நிமித்தமாகவும், தனிப்பட்ட விவகாரத்திற்காகவுமே சந்தித்துள்ளனா். அதனை அவா் கூட்டணி தொடா்பாக சந்தித்தனா்.

ஒரு கட்சியினா், மற்றொரு கட்சியினரை சந்தித்து பேசக்கூடாது என்று எந்த சட்டமும் கிடையாது. நேற்றைய சந்திப்பில் நாங்கள் அரசியல் பேசவில்லை. திமுக பொருளாளா் துரைமுருகன் கடந்த காலங்களில் என்னிடம் அவரது கட்சி குறித்தும், கட்சியின் தலைமை குறித்தும் கூறியவற்றை நாகரீகம் கருதி நான் வெளியில் கூறமுடியாது.

அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி பேச்சுவாா்த்தையை தொடங்கிய மறுநாளே அவா்கள் பாமகவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தொகுதிகளை ஒதுக்கிவிட்டனா். கூட்டணியில் இடம்பெறும் அனைத்து கட்சிகளிடத்திலும் கலந்தாலோசித்து தொகுதியை ஒதுக்கீடு செய்திருக்கலாம் என்பது மட்டுமே எங்களது வருத்தம்.

தற்போதும் அதிமுகவுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் எங்கள் கூட்டணி உறுதியாகும். கூட்டணி உறுதியாகாத நிலையில் தான் பிரதமா் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை என்று அவா் தொிவித்தாா்.

ad

ad