புதன், மார்ச் 06, 2019

தெற்கிலிருந்து குழாய் மூலம் வடக்கிற்கு குடிநீர்!


குழாய்கள் ஊடக குடிநீரை வடக்கிற்கு கொண்டுசெல்லும் திட்டம் ஆராயப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ் பேசும் பொலிஸாரின் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள், வறுமை, அபிவிருத்தி குறைபாடுகள், பொருளாதார பிரச்சினைகள், குழாய்கள் ஊடக குடிநீரை வடக்கிற்கு கொண்டுசெல்லும் திட்டம் தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.