புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2019

திலக் மாரப்பனவின் ஐ.நா அறிக்கையை திருத்தியதாக மைத்திரி தம்பட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இன்றைய தினம் உரையாற்றியிருந்த நிலையில், குறித்த அறிக்கையில் தான் திருத்தங்களை மேற்கொண்டிருந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக சமர்ப்பித்த உத்தியோகபூர்வ அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரின் இன்றைய அமர்வில் இலங்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஐ.நா. பிரேரணையை நடைமுறைப்படுத்தாமை, நல்லிணக்க பொறிமுறை தாமதிக்கப்படுகின்றமை, நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை செயற்படுத்தாமை தொடர்பாக ஐ.நா. ஆணையாளர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறித்த அறிக்கைக்கு இலங்கை சார்பில் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, குறித்த அறிக்கையில் உள்ள சகல விடயங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாதென கூறியுள்ளார்.

இந்தநிலையிலேயே வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் உரையில் தான் திருத்தங்களை மேற்கொண்டிருந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்ளுக்கு நேற்று இராப்போசன விருந்தொன்றை வழங்கி அவர்களுடன் நீண்ட அரசியல் பேச்சுக்களை நடத்தியிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திஸ்ஸ விதாரண, ராஜா கொல்லூரே, டியூ குணசேகர ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஜெனீவா விவகாரம் குறித்து இங்கு விசனத்துடன் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, அது தனது கையை மீறி நடந்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“ஜெனீவா விவகாரம் குறித்து நான் இறுதி நேரமே அறிவுறுத்தல்களை வழங்கினேன். அமைச்சர் திலக் மாரப்பனவை அழைத்து அவர் வாசிக்கவுள்ள அறிக்கையை கேட்டேன்.

அதிலுள்ள பல விடயங்களை ஏற்க முடியாது. அதனால் திருத்தினேன். நான் திருத்திய அறிக்கையையே அவர் வாசிக்கவுள்ளார். அவருக்கும் தெரியாமல் சில விடயங்கள் நடக்கின்றன.

பிரதமர் அலுவலகம் அவரை இயக்குகின்றது. ஆனால் நான் யார் என்பதை பிரதமருக்கு விரைவில் காட்டுவேன்.” என அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ad

ad