புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2019

ஜெனீவா செல்கிறார் விக்கினேஸ்வரன்?


வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான, சி.வி.விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவே, விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன் தற்போது இந்தியாவில் தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளார். மகா சிவராத்திரிக்குப் பின்னரே அவர் நாடு திரும்புவார். அதன் பின்னரே, அவர் ஜெனிவாவுக்குப் பயணமாவார் என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.

ad

ad