03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், மார்ச் 20, 2019

தமிழ் மக்களின் நீதிக்காக தொடர்ந்து போராடுவோம் – பிரிட்டன் எம்.பிக்கள் குழு உறுதி

மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அறிவித்துள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஹல்போன் கருத்து வெளியிடுகையில்,

“தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு நாம் தொடர்ந்தும் போராடுவோம்.இந்த விடயம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பலமாக ஒலிக்கின்றது. இந்நிலையில், இலங்கையில் போர்க்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும்” – என்றார்.

இதேவேளை, இலங்கையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இல்லை என்று தமிழர்களுக்கான பிரிட்டன் அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவர் போல் ஸ்கல்லி குற்றம் சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.