வெள்ளி, மார்ச் 08, 2019

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டியில் எதிர்ப்பு பேரணி


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில், அரசாங்கத்துக்கு எதிரான மாபெரும் பேரணியின் முதல் நாள் நிகழ்வு, இன்று (08) கண்டியில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த பேரணி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு, கண்டி பொதுச்சந்தைக்கு அருகாமையில் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்ப்பு ரேணியானது, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.