திங்கள், மார்ச் 11, 2019

சிறிலங்கா அதிபரின் நேரடிக் கட்டுப்பாட்டில் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவை
தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார்.
தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவை பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வருவது தொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தை  நிதி அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சிறப்பு அரசிதழ் அறிவிப்பின் மூலம் உத்தரவிட்டுள்ளார்.