புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2019

ஜெனீவா தீர்மானத்தை அமுல்படுத்த ஜனாதிபதி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் ; மாவை


ஜெனீவா தீர்மானத்தை அமுல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோதிராஜா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தேர்தலில் போட்டியிடும் போது நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என வாக்குறுதியளிக்கின்றனர்.

எனினும் தேர்தலில் வெற்றிபெற்ற அனைவரும் அதன் பின்னர் அதனை மறந்து விடுகின்றனர். மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை காரணமாகவே தமிழ், முஸ்லீம் மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.

இந்த நம்பிக்கையை வீணாக்கும் வகையில் கடந்த ஐப்பசி மாதம் ஜனாதிபதி செயற்பட்டிருந்தனர். ஜனாதிபதி மீதான நம்பிக்யை அவரே வீணடித்து விட்டார்.

ஜெனீவாவிற்கு சென்று அங்கு விளக்கமளிப்பது மாத்திரம் முக்கியமில்லை. ஜெனீவா தீர்மானத்தை அமுல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்க வேண்டும்“ என குறிப்பிட்டுள்ளார்.

ad

ad