புதன், மார்ச் 13, 2019

சொந்த மண்ணில் சோபை இழந்த கோலி படை- தொடரை வென்று அசத்தியது அவுஸ்திரேலியா


இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.

இதில் ஹைதராபாத், நாக்பூரில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், ராஞ்சி, மொகாலியில் நடந்த அடுத்த இரு ஆட்டங்களில் அவுஸ்திரேலிய அணியும் வெற்றிபெற்றன.

இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருக்க தொடரின் இறுதியும் ஐந்தாவதுமான போட்டி இன்று டெல்லியில் உள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் ஆரம்பமாகியது.