புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2019

தொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்ள அமைச்சரவை ஒப்புதல் ; விஜயகலா மகேஸ்வரன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடக்கு – கிழக்கில் தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றுபவர்களை இலங்கை ஆசிரியர் சேவையின் 3ஆம் வகுப்பின் தரம் III இற்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பாக கல்வி இராஜங்க அமைச்சர் திருமதி. விஜயகலா மகேஸ்வரனின் வேண்டுகோளுக்கமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு கடந்த 14ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த அமைச்சரவைத் தீர்மானத்தை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொதுச்சேவை ஆணைக்குழுவுடன் ஆலோசித்து நடைமுறைப்படுத்துமாறு பணிப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனங்களை வழங்குவதற்குரிய சகல நடவடிக்கைகளையும் எதிர்வரும் வருடப்பிறப்பிற்கு முன்பாக மிகத் துரிதமாக மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் உரிய அதிகாரிகளுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர். திருமதி. விஜயகலா மகேஸ்வரனரால் பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன.

மேலும் 06.12.2016 திகதி அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் கிழக்குமாகாணத்தில் தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கத் தீர்மானிக்கப்பட்ட 445 பேருக்கும் அதிகமானோர் காணப்பட்டமையால் மொத்தம் 811 தொண்டராசிரியர்களும் கவனத்தில் எடுக்கப்பட்டு போர் சூழலில் அவர்கள் தொண்டராசிரியர்களாகச் சேவையில் ஈடுபட்ட தகைமைகளை நிறைவு செய்த சகல ஆசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட14.03.2019 அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ad

ad