வியாழன், மார்ச் 14, 2019


மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களை கொழும்பு குற்றப்புலனாய்வு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18/03/2019 ல் விசாரணைக்காக கொக்கட்டிச்சோலை பொலிஷ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக பா.அரியநேத்திரன் வதியும் அவரின் அம்பிளாந்துறை வீட்டில் அதற்கான தகவல் கடிதம் பொலிசாரால் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.கடந்த 2018,நவம்பர் 27, மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் மாவீரர்தினம் இடம்பெற்றபோது இவர் அந்த நிகழ்வு ஏற்பாடுகளை செய்திருந்தார் தாண்டியடி துயிலும் இல்லத்திற்கு பக்கமாவும் மாவீர ர் தினங்கள் இடம்பெற்றன.

மாவீரர் தினம் இடம்பெற்று இரண்டு தினங்களால் வணதீவு சோதனை சாவடியில் இரண்டு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்ட பின்பு இதுதொடர்பான விசாரணைகள் இடம்பெறும் வேளையில் கடந்த 2018 டிசம்பர் மாதமும் இது தொடர்பான விசாரணையில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் சமூகம் கொடுக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினராக கடந்த 2004,ம் ஆண்டு தொடக்கம் 2015, ம் ஆண்டுவரையான காலத்தில் இவர் நான்குதடவையும் பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத 2016 தொடக்கம் தற்போது வரை மூன்று தடவையும் பல்வேறுபட்ட விசாரணைகளுக்காக பா.அரியநேத்திரன் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவாலும்,குற்றப்புலனாய்வு பிரிவாலும் விசாரணக்குள்படுத்தப்பட்டதும் 2008 தொடக்கம் 2010 வரை வெளிநாடுகளுக்கு செல்லாமல் இவரின் கடவுச்சீட்டை முடக்கி வைத்ததும் குறிப்பிடத்தக்கது