சனி, மார்ச் 30, 2019

ஈழத்தமிழர் விவகாரம்! வைகோ மீது எடப்பாடி பாய்ச்சல்

ஈழத் தமிழர்கள் படுகொலைப்பற்றி வாய் கிழிய பேசிய வைகோ இப்போது கைகட்டி வாய்பொத்தி தி.மு.க தலைவரிடம்
சரணாகதி அடைந்துவிட்டார், இதைவிட வேறென்ன கேவலம் வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள நிலையில், குறித்த பிரச்சார நடவடிக்கைகளின்போது ஈழத்தமிழர் தொடர்பான விவகாரங்களும் ஆங்காங்கே தேர்தல் பிரச்சார மேடைகளில் ஒலித்த வண்ணமே உள்ளன.
இந்நிலையில், தேர்தல் பிரச்சார மேடையொன்றில் கருத்துத் தெரிவித்த முதல்வர் பழனிச்சாமி,வைகோ, கூட்டணிக்காகக் கொள்கையை விட்டுவிட்டார். கொள்கையும் கிடையாது கோட்பாடும் கிடையாது.இலங்கை குறித்துப் பேசிக்கொண்டிருந்த வைகோ இப்போது அதை விட்டுவிட்டார்.
இலங்கைத் தமிழர் படுகொலை பற்றி வாய் கிழியப் பேசிய வைகோ, இப்போது கைகட்டி, வாய்பொத்தி திமுக தலைவரிடம் சரணாகதி அடைந்துவிட்டார். இதைவிட வேறென்ன கேவலம் வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.