புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2019

சம்பந்தனை நான் சுடத்திரிந்தேனா “இல்லை என்று மறுக்கும் சிறீதரன்.?


தான் ஒருபோதும் இரா.சம்பந்தனை சுடுவதற்காக திரியவில்லை எனவும், பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் நேற்று தெரிவித்துள்ளார். விடுதலை புலிகளும் குற்றம் செய்தனர் என்பது தொடர்பில் சுமந்திரன் கூறி வருகின்ற விடயத்தை குறித்தும் பதிலளித்துள்ளார்


மேலும் அவர் கூறுகையில்

இலங்கை சனாதிபதி மற்றும் பிரதமர் அவர்களால் இளைக்கப்பட்ட குற்றங்கள் பிரதானமாக காணப்படும். அதேவேளை விடுதலைப்புலிகள் இளைத்ததாக கூறப்படும் குற்றங்களை விசாரிப்பதற்கு அவ்வமைப்பை வழிநடத்தியவர்கள் இல்லை. அவ்வாறு இருந்தால் அவர்களிடம் விசாரணை செய்யட்டும் எனவும் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் 4 இலட்சத்திற்கு மேலான மக்கள் அங்கு உள்ளனர் என சிங்கள ஒட்டுக்குழு உறுப்பினர் ஆனந்தசங்கரி உள்ளிட்ட பலரும் தெரிவித்திருந்தனர். இனப்படுகொலையாளன் பசில் ராஜபக்ச மிக குறைவான ஆட்களே அங்கு இருந்தனர் என தெரிவித்தபோது ஆனந்தசங்கரி, ராயப்பு ஜோசப் உள்ளிட்ட பலரும் குறிப்பிட்ட விடயங்கள் உண்மையானதென பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி படையினர் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டனர். கொத்து குண்டுகள், விமான தாக்குதல்களாலும் தாக்குதல்களை மூர்க்கமாக மேற்கொண்டனர். இவ்வாறான நிலையில் யுத்த குற்றம் தொடர்பில் அதிகம் பொருப்பு கூற வேண்டியவர்கள் படையினரே எனவும் தெரிவித்தார்.

சுமந்திரன் கூறிய கூற்று சரியானதா என மீண்டும் அவரிடம் வினவியபோது,சுமந்திரன் யுத்தம் இடம்பெற்றபோது இங்கு இருக்கவில்லை. இங்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும் அவருக்கு தெரியாது. வெறுமனே அவர் அறிக்கைகளை வைத்தே அவர் கருத்துக்களை தெரிவித்து வரலாம் எனவும் அவர் இதன் போது தெரிவித்தார்

ad

ad