சனி, மார்ச் 02, 2019

நறுவிலிக்குளத்தில் மாதிரிக் கிராம வீடுகளுக்கு அடிக்கல்!!


மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் 51 வீடுகளைக் கொண்ட மூன்று மாதிரி கிராமங்களில் அமைக்கப்படவுள்ள வீடுகளுக்கு இன்று அடிக்கல் நடப்பட்டது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நானாட்டான் பிரதேசத்தில் ஏழரை லட்சம் பெறுமதியில் 51 வீடுகளைக் கொண்ட மூன்று மாதிரி கிராமங்கள் நறுவிலிக்குளம் கிராமத்தில் அமைக்கப்படவுள்ளன.

நிகழ்வில் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தி.பரஞ்சோதி, உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர், கிராமசேவையாளர் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் சந்தான் ஆகியோர் கலந்து கொண்டன.

மக்களின் பங்களிப்புடன் கட்டப்படும் இந்த வீட்டுத்திட்டங்களில் நறுவிலிக்குளம் கிராமத்தில் 18 வீடுகளும், மடுக்கரையில் 16 வீடுகளும், செம்மண்தீவில் 17 வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.